Sharwanand and Rakshitha Reddy Welcome Newborn Daughter: 'எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்துக்கு இப்போது குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
'எங்கேயும் எப்போதும்' பட ஹீரோ ஷர்வானந்துக்கு குழந்தை பிறந்த தகவலை, அவரே புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
மார்ச் 07, மும்பை (Cinema News): டோலிவுட் திரையுலகின் இளம் மாஸ் ஹீரோவான ஷர்வானந்த் (Sharwanand) கடந்த ஆண்டு ரக்ஷிதா ரெட்டி (Rakshitha Reddy) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா அரண்மனையில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. School Student Commits Suicide: எப்போதும் ரீல்ஸ்.. தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!
இந்நிலையில் அவருடைய பிறந்தநாளினை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை ஷர்வானந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்களின் செல்ல தேவதைக்கு லீலா தேவி மைனி என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஷர்வானந்துக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஷர்வானந்த் தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.