Daughter in law Caught on Camera Attacking Elderly Mother in law in Gurdaspur (Photo Credit : @ShoneeKapoor X)

அக்டோபர் 03, பஞ்சாப் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர்(Gurdaspur) மாவட்டம் கோத்தே கிராமத்தில் வசித்து வருபவர் குர்பஜன்கவுர். இவரது கணவர் தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் கணவர் உயிரிழந்த நிலையில், குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதனிடையே அனைத்து சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றி கொடுக்குமாறு கூறி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

கையில் கிடைப்பதை வைத்து அடித்து மாமியாரை தாக்கிய மருமகள் :

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் சொத்துக்களை கேட்டு ஹர்ஜீத்கவுர் அவரது மாமியாரை தாக்கியுள்ளார். முதலில் வாக்குவாதம் செய்த நிலையில், பின் கைகலப்பாக மாறி தனது மாமியாரின் தலைமுடியை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனைக் கண்ட ஹர்ஜீத்கவுரின் மகன் தனது தாயிடம் பாட்டியை அடிக்காதீர்கள்.. நிறுத்துங்கள் என கூறியுள்ளார். ஆனால் மகன் சொல்வதை கேட்காமல் ஹர்ஜீத்கவுர் தொடர்ந்து மாமியாரை தாக்கியதால், ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சிறுவன் செல்போன் மூலம் பாட்டி தாக்கப்படுவதை வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை இணையதளங்களிலும் பதிவிட்ட நிலையில், தற்போது அது பரவி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. Indian Bank Job: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. இதுதான் கடைசி தேதி.!

காவல்துறையினர் விசாரணை :

இது தொடர்பான வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மகளிர் காவல் ஆணையம் தாமாக முன்வந்து வீடியோவை ஆதாரமாக வைத்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறையினருக்கு கடிதம் அனுப்பி தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்தைக்கேட்டு மாமியாரை கொடூரமாக மருமகள் தாக்கிய வீடியோ (Gurdaspur Attack Video):