July 5th Tamil Movie Releases: ஜூலை 5ம் தேதி வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!

இந்த ஜூலை முதல் வாரம் தியேட்டரில் என்னென்ன படங்கள் வெளியாகயிருக்கின்றன என்று பார்க்கலாம்.

Tamil Movie (Photo Credit: @CinemaniaIndia X)

ஜூலை 04, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவை பொறுத்தவரை இம்மாதம் பரவாயில்லை என்று சொல்லலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டு இருந்த தமிழ் சினிமாவுக்கு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து கருடன், மகாராஜா என இரண்டு வாரம் மக்களுக்கு விருந்தாகவே அமைந்தது. இந்த நிலையில் இம்மாதத்தின் முதல் வாரமான நாளை (ஜூலை 5) எட்டு படங்கள் வெளியாகின்றன. அவைகள் என்னென்ன என்று இப்பதிவில் நாம் காணலாம்.

7ஜி (7G): ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின் நடித்துள்ள படம் ‘7ஜி’. இப்படத்துக்கு சிதார்த் விபின் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஹாரூன் தனது ட்ரீம் ஹவுஸ் பேனர் மூலம் படத்தை தயாரித்துள்ளார். கண்ணா படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரர், த்ரில்லர் பணியில் உருவாகி உள்ள இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது.

தேரடி (Theradi): இது ஒரு தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம். இதில் தேவேந்திர குல இன மக்களின் வாழ்வியல் இயல்பு, மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வு சார்ந்த கருத்துகளை, பக்குவமாக கதை விவரிப்பு செய்திருக்கிறார் இதன் இயக்குனர் பாலமுரளி. அதுபோக தமிழ் சினிமாவில் முதல் முறையாக முழுக்க தற்கால தமிழ் வழக்க சொற்களை மட்டுமே பயன்படுத்தி ஆங்கிலம் கலக்காத வசனங்களில் இந்த தேரடி படத்தை உருவாக்கியிருக்கிறார், இந்த படத்தின் இயக்குனர் பாலமுரளி. TN Weather Update: நீலகிரி, கோயம்புத்தூரில் கொட்டப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

எமகாதகன் (Emagadhagan): அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில், பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்க, சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எமகாதகன்’. இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது.

நானும் ஒரு அழகி (Naanum Oru Azhaghi): கே.சி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பொழிக்கரையான் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "நானும் ஒரு அழகி". இத்திரைப்படத்தில் அருண், மேக்னா, ராஜதுரை,சிவசக்தி, சுபராமன், ஸ்டெல்லா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் துணிச்சலை பேசும் படமாக இப்படம் அமைந்துள்ளது.

கவுண்டம்பாளையம் (KavundamPaalayam): நடிகர் ரஞ்சித் தற்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர். நாடக காதலுக்கு எதிரான படமாகவே இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக நடிகரும் இயக்குநருமான ரஞ்சித் கூறியுள்ளார். ஆனால் படத்தின் மேக்கிங்கை பார்த்தால் ரொம்பவே மோசமாக உள்ளது, இந்த படத்தை எல்லாம் தியேட்டரில் வெளியிட்டால் மக்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்கள் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பூமர காத்து (PoomaraKaathu): ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில்,ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் "பூமர காத்து". இத்திரைப்படத்தில் விதுஷ்,சந்தோஷ் சரவணன், மனிஷா, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், மனோபாலா, தேவதர்ஷினி, குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உட்பட பலர் நடித்துள்ளனர். பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Koo App Shuts Down: இந்தியாவின் டிவிட்டர் ’கூ’க்கு.. நிரந்தர 'ஊ'.. நிதி நெருக்கடியால் வந்த சோகம்..!

டெஸ்பிகபிள் மீ 4 (Despicable Me 4): 2010ம் ஆண்டு வெளியான டெஸ்பிகபிள் மீ படத்தின் 4ம் பாகம் நாளை திரையரங்கில் வெளியாகிறது. மினியான்ஸ் செய்யும் லூட்டியை குழந்தைகளுடன் சந்தோஷமாய் பார்த்து மகிழ இந்த படத்திற்கு அனைவரும் போலாம். இது ஒரு அனிமேஷன் படமாகும். மேலும் இந்த படம் தமிழ் டப்பிங்கில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுவெளியீடாகும் திரைப்படங்கள்:

எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story): 2016இல் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி". இப்படமானது நாளை ரீரிலீஸ் ஆக போகிறது. இத்திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட், அனுபம் கேர், பூமிகா, கைரா அத்வானி, திஷா பதானி உட்பட பலர் நடித்துள்ளனர். பீஹார் ராஞ்சியில் வசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி, உலக கோப்பையை இந்தியாவுக்கு எப்படி பெற்று தருகிறார்? எனும் கதை தான் "எம்எஸ்.தோனி".