Koo (Photo Credit: @enough_jainil X)

ஜூலை 04, சென்னை (Technology News): இந்தியாவில் பிரபலமான சமுக வலைதளமாக வலம் வந்த 'கூ' (Koo) அதன் ஆரம்பக்கட்டத்தில் டிவிட்டருக்கு (X) போட்டியாக கருதப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் தான் இந்த செயலியை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த செயலியை அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா என்ற 2 இந்தியர்கள் தான் உருவாக்கினார்கள்.

கூ செயலி: ட்விட்டர் நிறுவனம் போல கணக்கை தொடங்க கூ செயலி, அதிக தகவல்களை கேட்பதில்லை. வெறும் போன் நம்பர் மட்டும் இருந்தால் போதும், கடவுச்சொல் செல்பேசிக்கு குறுந்தகவலாக வரும். அதை தட்டச்சு செய்தால் போதும், கூ செயலியில் கணக்கை தொடங்கி பதிவிட ஆரம்பிக்கலாம். இதனால் இந்த செயலியை பல்வேறு அரசியல் கட்சியினர் கணக்கை ஓபன் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் Download செய்த நிலையில், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமானது. Varalaxmi Sarathkumar Reception: "டும்டும் கல்யாணம்.. டும்டும் கல்யாணம்.." வரலட்சுமி, நிக்கோலாய் திருமண வரவேற்பு..!

நிதி நெருக்கடி: இந்த செயலியை ஆரம்பத்தில் அதிகம் பேர் பயன்படுத்தி இருந்தாலும், தற்போது அனைவரும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என்று சென்றதால் இங்கு பயனாளர்கள் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் 2023 ஆம் ஆண்டில் அதன் பணியாளர்கள் செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் தற்போது இந்த செயலியை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அதன் நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு போட்டியாக பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டாலும், அதனை தக்க வைத்துக்கொள்வது பெரும் சுமையாகவே இருந்து வருகிறது. கூ மாதிரி பல செயலிகள் அறிமுகமான வேகத்தில் காணாமல் போயிருந்தாலும், கூ மட்டும் மூன்று வருடத்திற்கு மேல் தாக்கு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.