Lokesh Kanagaraj’s Facebook Hacked: ஹேக் செய்யப்பட்ட லோகேஷ் கனகராஜின் பேஸ்புக்... என்ன நடந்தது?..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அதில் தவறான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 13, சென்னை (Chennai): இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தற்போது தலைவர் 171வது படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். அவர் அதற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன. மேலும் அந்த படத்தின் படப்பிடிப்பானது அடுத்த வருடம் தொடங்க உள்ளது.
பேஸ்புக் ஹேக்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி அவரது ஐடியின் பெயரை மாற்றி, அதில் பல தவறான வீடியோக்களையும் ஹேக்கர்ஸ் போஸ்ட் செய்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் இதனைப் பற்றி பல மீம்ஸ்கள் வெளியாகின. Kinetic Zulu: கைனெடிக் நிறுவனத்தின் புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு!
லோகியின் ட்வீட்: இதனைத் தொடர்ந்து இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அவரது எக்ஸ் தளத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். வேறு எந்த சமூக ஊடக கணக்குகளும் என்னிடம் இல்லை அல்லது பயன்படுத்தவில்லை. தயவு செய்து மற்ற போலி கணக்குகளை புறக்கணிக்கவும், பின்தொடரவும் வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.