டிசம்பர் 13, டெல்லி (Delhi): மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினில் கைனெடிக் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன ஜூலுவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் பல்வேறு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்த சார்ஜில் நீண்ட தொலைவிற்கு செல்லலாம் என்றும் கூறுகின்றனர்.
ஜூலு சிறப்பம்சங்கள்: இந்த ஸ்கூட்டர் ஆனது பிக்ஸல் வெள்ளை, இன்ஸ்டா ஆரஞ்ச், யுடியுப் சிவப்பு, பிளாக் எக்ஸ், எஃப்.பி ப்ளூ மற்றும் க்ளவுட் க்ரே என மொத்தம் ஆறு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலையாக ரூபாய் 94,990 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Parliament Attack: நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீசி திடீர் தாக்குதல்: பார்வையாளர்களாக வந்த இரண்டு பேர் அதிர்ச்சி செயல்.!
இந்த ஸ்கூட்டரை இந்தியா முழுவதும் உள்ள கைனெடிக் கிரீன்(Kinetic Green) டீலர்ஷிப் ஷோரூம்களில் வாங்கலாம். மேலும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் இணையம் வழியாகவும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஸ்கூட்டரில் பேட்டரியின் வெப்பநிலை எப்போதும் கண்காணிக்கப்படுவதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது.
15 ஆம்பியர் மின்சாரம் மூலமாக கூட, இந்த புதிய ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை, 30 நிமிடங்களில் ஜீரோவில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் நிரப்ப முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகள், இருக்கைக்கு அடியில் இடவசதி, எல்இடி டிஆர்எல்-கள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், பைகளை மாட்டிக் கொள்ள முன்பக்கத்தில் கொக்கி, ஆட்டோ பவர்-கட் சார்ஜர், மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளன.