MK Stalin Watched Coolie Movie (Photo Credit : @Dir_Lokesh X)

ஆகஸ்ட் 14, சென்னை (Cinema News Tamil): தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி திரைப்படத்தை தற்போது இயக்கி வழங்கி உள்ளார். இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், அமீர்கான், சுருதிஹாசன் உட்பட பலரும் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் படங்கள் எப்போதும் தனித்துவமாக ரசிகர்களால் பெருமளவு கவனித்து கொண்டாடப்பட்டு வந்தது. Coolie Movie: திரையரங்குகளில் வெளியானது 'கூலி'.. ரசிகர்கள் கொண்டாட்டம்.! 

காலை 9 மணிக்கு வெளியானது கூலி திரைப்படம் :

இதனிடையே கமலை வைத்து விக்ரம் படத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டு ரசிகர்களின் பாராட்டையும் குவித்த நிலையில், தற்போது ரஜினியை வைத்து இயக்கி கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. பிற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக காலை 10 மணிக்கு திரையிடப்படும் காட்சிகள் 1 மணி நேரம் முன்னதாக 9 மணிக்கு திரையிடப்படுகிறது.

இணையத்தில் வெளியாகும் விமர்சனங்கள் (Coolie Review) :

அந்த வகையில் முதல் நாள், முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர். அமெரிக்காவில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் படம் வெளியாகி படத்தின் விமர்சனங்களும் வெளிவர தொடங்கிவிட்டன. ரஜினி, லோகேஷ் இணைந்து நடித்துள்ளது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இப்படம் தான் முன்னதாக இயக்கிய படங்களில் சந்தித்த விமர்சனங்களுக்கான பதிலாக இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜின் கூலி படத்தை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் :

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று இரவில் சிறப்புக் காட்சியை பார்த்துள்ளனர். ரஜினியின் கூலி திரைப்படத்தை பார்த்த தமிழ்நாடு முதல்வர் லோகேஷை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கு நன்றி கூறி பதிவிட்ட லோகேஷ் கனகராஜ் :