ஆகஸ்ட் 15, சென்னை (Chennai News): தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி திரைப்படத்தை தற்போது இயக்கி வழங்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், அமீர்கான், சுருதிஹாசன் உட்பட பலரும் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் படங்கள் எப்போதும் தனித்துவமாக ரசிகர்களால் பெருமளவு கவனித்து கொண்டாடப்பட்டு வந்தது. Coolie FDFS Celebration: திரையரங்குகளில் வெளியானது 'கூலி'.. ரசிகர்கள் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் கொண்டாட்டம்.!
திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் :
அந்த வகையில் நேற்று காலை 9 மணியளவில் தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட படத்தைக் காண ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். இதனால் திரையரங்குகள் பலவும் விழாக்கோலம் (Coolie FDFS Celebration) பூண்டிருந்தன. நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சுருதிஹாசன், சாண்டி உட்பட பலரும் திரையரங்குக்கு நேரில் வந்து படம் பார்த்தனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பிற மாநிலங்களில் படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. Coolie Review: கூலி படம் எப்படி இருக்கு?.. லோகேஷ் - ரஜினி கூட்டணி ஜெயித்ததா?.. மக்களின் விமர்சனம் என்ன?.!
3 மில்லியன் டாலர்கள் வசூலித்த தமிழ் படம் :
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இந்த வார இறுதிவரை அனைத்து திரையரங்குகளிலும் கூலி திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் கூலி திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வசூல் விபரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூலி திரைப்படம் அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த தமிழ் படம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த தமிழ் படம் - சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
Thalaivan Erangi, Saritham Eluthavey 🔥#Coolie becomes All time highest North America premieres gross for any Tamil film 🌟#Coolie in theatres worldwide 🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/xzORw2R48w
— Sun Pictures (@sunpictures) August 14, 2025