Anouncement of National Award: தேசிய விருதை பெறப்போகும் தமிழ் படம் எது தெரியுமா? பலரும் எதிர்பார்க்காத எதார்த்தமான திரைப்படம்.!
இந்த விருது மேலும் பல நல்ல படைப்புகள் உருவாகுவதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.
ஆகஸ்ட் 25, சென்னை (Cinema News): நேற்று 69 வது தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) அறிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமா பிரிவுக்கான சிறந்த படமாக நடுவர்கள் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை தேர்வு செய்தனர். இந்த படம் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம், எம். மணிகண்டன் இயக்கத்தில் வெளியானது. மேலும் விமர்சன ரீதியில் படம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
படத்தின் முன்னணி கதாபாத்திரமான 85 வயது விவசாயியாக திரு.நல்லாண்டி நடித்திருந்தார். இந்தப் படத்தில் யோகி பாபு (Yogi Babu), விஜய் சேதுபதி (Vijay Sethupathi), முனீஸ்வரன் (Muneeswaran) போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இடம்பெற்று இருந்தனர். விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் இந்தப் படத்தை இயக்குனர் மணிகண்டன் தயாரித்து வெளியிட்டிருந்தார்.
கிராமங்களில் இருக்கும் விவசாயிகளின் எதார்த்த பிரச்சினைகளை பேசும் விதமாக இந்த படம் அமைந்திருந்தது. நவீன வாழ்க்கை கொஞ்சம் கூட அண்டாத மனிதனாக படம் முழுக்க விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நல்லாண்டி. Xi Jinping on Relationship with India: இந்திய-சீன உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல சீன அதிபர் விருப்பம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமரிடம் கோரிக்கை.!
குலதெய்வ வழிபாட்டிற்காக கிராமமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒருபடி நெல்லை விளைவிக்கும் போது, இவருக்கு ஏற்படும் இன்னல்களை படமாக்கி இருக்கிறார் இயக்குனர். இந்தப் படத்திற்கு கிடைத்த விருது முழுக்க முழுக்க திறமைக்காகவும் திரைக்கதைக்காகவும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.