Ajith's Dangerous Car Stunt In Vida Muyarchi: கார்ல பெரிய ஜித்து.. பட்டைய கிளப்பும் அஜித்குமாரின் ஸ்டண்ட்.. வைரலாகும் வீடியோ..!

விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Ajith's Dangerous Car Stunt (Photo Credit: @LycaProductions X)

ஏப்ரல் 04, சென்னை (Chennai): தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Tamil Puthandu Wish 2024: உள்ளம் கவர்ந்தவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தண் வீடியோவில், அஜித்தும் ஆரவ்வும் காரில் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.