Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து அறிவிப்பு சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Jayam Ravi - Aarthi (Photo Credit: @Instagram)

செப்டம்பர் 09, சென்னை (Cinema News): கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து நாக ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி: ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!

சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்தார். தொடர்ந்து அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

ஜெயம் ரவிக்கு விவாகரத்து: இதற்கிடையே தற்போது ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி ( Divorce) அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். Producer Dilli Babu Passes Away: முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

காரணம்: ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே வெகு நாட்களாகவே சண்டைகள் இருந்ததாகவும் அதனால் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா தான் ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை கண்டன. இதனால் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் சம்பளத்தை குறைத்தார் ஜெயம் ரவியின் மாமியார். இதனால் ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் சண்டை வந்துள்ளது. இதனாலேயே அவரது மனைவிக்கும் அவருக்கும் பிளவு ஏற்பட்டது. அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.