Tamil Rockers: வேட்டையன் படத்தை படம்பிடித்த தமிழ் ராக்கர்ஸ் கும்பலை சேர்ந்த இருவர் கைது; கேரளாவில் சிக்கிய குருவிகள்.!
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு பணியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஒருகாலத்தில் இருந்து, இன்று ஓடி ஒழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர்.
அக்டோபர் 13, திருவனந்தபுரம் (Cinema News): ஜெய் பீம் இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில், நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் (Manju Warrier), ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உட்பட பலர் நடிக்க, லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ரூ.160 கோடி செலவில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). அக்.10, 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியானது. படம் இன்று வரை ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் (TamilRockers) குழுவை சேர்ந்த இருவர் கைது:
இந்நிலையில், திரையரங்கில் இருந்து செல்போனில் வேட்டையன் திரைப்படத்தை பதிவு செய்துகொண்டு இருந்த இரண்டு ஐடி ஊழியர்களை கேரளா மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவு செய்து பதிவேற்றி வந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது அம்பலமானது. இவர்களுக்கு படத்தை பதிவேற்றுவதால் ரூ.40 ஆயிரம் முதல் சில இலட்சம் வரை மாத வசூலாக கிடைக்கிறது. Oviya Thug Life Reply: என்னது என்னோட ஆபாச வீடியோ லீக் ஆகிருச்சா? தக் லைப் பதில் சொன்ன ஓவியா.. விபரம் உள்ளே.!
ஐடி ஊழியர்கள்:
இதனால் தமிழ் மொழி படங்கள் வெளியாகும் சமயத்தில், அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில், அமைதியான சூழல் கொண்ட திரையரங்கை தேர்வு செய்து, கூடுதல் இருக்கைகளை முன்கூட்டியே புக்கிங் செய்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின் திரையரங்கு நிர்வாகத்திற்கு கூட தெரியாமல் செல்போனை வைத்து படம் முழுவதையும் வீடியோ எடுக்கும் நபர்கள், பின் அதனை பதிவேற்றி வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குமரேசன் (29), பிரவீன் குமார் (31) என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராயன் படத்தை படம்பிடித்த அட்மின் கைது:
வேட்டையன் திரைப்படத்துடன் கேரளாவில் ஏஆர்எம் திரைப்படமும் களமிறங்கியுள்ள நிலையில், வேட்டையன் திரைப்படத்தை வீடியோ எடுத்தபோது இவர்கள் சிக்கியுள்ளனர். முன்னதாக ராயன் திரைப்படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் வீடியோ எடுத்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டு, இணையம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதலாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.20000 கோடி இழப்பு:
இவ்வாறாக திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்படும் திரைப்படங்களால், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என நிதியிழப்பு மட்டும் ரூ.20000 கோடி ஏற்படுகிறது. திரைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விரைவில் வெளியாகுவதால், படம் எடுக்க நினைக்கும் நபர்களும் தயங்கி வருகின்றனர். இதனை திரைத்துறையினருக்கு அவர்களின் எதிர்காலம் முடங்கும் சூழலும் உண்டாகிறது. படம் தோல்வியடைந்தால் அல்லது திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் நிலை செல்போனில் பதிவிறக்கம் என்ற நிலைக்கு சென்றால், படத்தின் வசூல் கேள்விக்குறியாகி இழப்பு ஏற்படும் அபாயகர சூழலும் உண்டாகும்.