Atlee Watches FDFS in Chennai: ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்திருந்த இயக்குனர் அட்லீ: ஜவான் டீ சர்ட் அணிந்து மாஸ் என்ட்ரி.!

இந்நிலையில் படத்தின் இயக்குனர் அட்லீ, அவரது மனைவியுடன், ஜவான் டி-ஷர்ட் அணிந்து சென்னையில் இருக்கும் திரையரங்கில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்திருந்தார்.

Director Atlee with his wife (Photo Credit: Twitter)

செப்டம்பர் 7, சென்னை (Cinema News): ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி  அதற்குப்பின் தெறி, மெர்சல், பிகில் என்று வரிசையாக நடிகர் விஜயை வைத்து வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லீ.

கடந்த நான்கு வருடங்களாக அட்லீயின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் இப்போது பாலிவுட் பக்கமாக தனது முத்திரையை பதித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமான வரவேற்போடு வெளியாகி இருக்கிறது. Super Four Team: யாரை களமிறக்குவர் கேப்டன் ரோகித் சர்மா?- ஷமியா? தாக்கூரா?: சஸ்பென்சில் ரசிகர்கள்.!

இந்தப் படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்திருக்கின்றனர். அதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் ஜவான் படம் அதிகாலையே திரையிடப்பட்டு உற்சாக வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் காலை 9 மணிக்கு, ஜவான் பட த்தின் முதல் காட்சி தமிழகத்தில் உள்ள  திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இயக்குனர் அட்லீ அவரது மனைவியுடன் சென்னையில் இருக்கும் ரோகினி தியேட்டரில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ (FDFS) பார்க்க வந்திருந்தார். மேலும் அவர்கள் இருவரும் ‘ஜவான்’ பெயர் பொறிக்கப்பட்ட டீ-சர்ட் அணிந்திருந்தனர். அவர்களுடன்  இசையமைப்பாளர் அனிருதும்  இணைந்து கொண்டார். அவர்களுக்கு ரசிகர்கள் தடபுடலான வரவேற்பு அளித்தனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif