Kantara Chapter 1 Release Date (Photo Credit : @hombalefilms X)

செப்டம்பர் 10, சென்னை (Cinema News): ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் பல மொழிகளிலும் வரவேற்பு பெற்று பிராந்திய மொழிகளில் மாற்றப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. ரூ.25 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 500 கோடியை கடந்து வசூல் செய்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. காந்தாரா பாகத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாவது பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாக்கப்பட்டு வந்தது. Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் மரணம்? ஷாக் தந்த செய்தி.. பதில் சொன்ன காஜல்.! 

விரைவில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 :

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், படம் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமை ரூ.33 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே படத்தை இந்திய அளவில் மட்டுமல்லாது பிற நாடுகளிலும் திரையிட ஏற்பாடு செய்துள்ள படக்குழு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாz ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் என 30 நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.