Atlee & Shah Rukh Khan (Photo Credit: @Atlee X)

ஆகஸ்ட் 02, சென்னை (Cinema News Tamil): இந்திய திரைத்துறையில் சிறந்த நடிகர், படைப்புகள், திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாருக்கானின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானின் நடிப்புக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த தகவல் ஷாருக்கான் தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 71st National Film Awards: 71வது தேசிய திரைப்பட விருதுகள்; 3 விருதுகளை வென்றது 'பார்க்கிங்'..! 

சிறந்த நடிகர் ஷாருக்கான்:

அட்லீயின் இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி தேசிய அளவிலும் கவனிக்கப்பட்டது. இயக்குனர் அட்லீ தேசிய அளவில் அடையாளம் பெற்றார். இந்நிலையில், அட்லீ படத்தில் நாயகனாக மாறுபட்ட கதாபத்திரங்களில் நடித்திருந்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சியில் பாராட்டு:

இந்த விஷயம் குறித்து இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளபக்கத்தில் பாராட்டு & மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஜவான் படத்தை இயக்க எனக்கு வாய்பளித்ததற்கு நன்றி. நமது படம் ஜவான் தேசிய விருது வாங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னை நம்பியதற்கு நன்றி. எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்நாளில் மறக்க முடியாதது" என தெரிவித்துள்ளார்.

அட்லீ ஜவான் படத்தை இயக்க வாய்ப்பு வழங்கிய ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்தார்: