ஆகஸ்ட் 14, சென்னை (Cinema News Tamil): தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி திரைப்படத்தை தற்போது இயக்கி வழங்கி உள்ளார். இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், அமீர்கான், சுருதிஹாசன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜின் படங்கள் எப்போதும் தனித்துவமாக ரசிகர்களால் பெருமளவு கவனித்து கொண்டாடப்பட்டு வந்தது.
அனல் பறக்கும் கூலி ப்ரோமோவால் எகிறிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு :
Ennayaa promovellam therikuthu !! #Coolie pic.twitter.com/QarElSvjXz
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 13, 2025
திரையரங்குகளில் வெளியானது கூலி திரைப்படம் :
இதனிடையே கமலை வைத்து விக்ரம் படத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டு ரசிகர்களின் பாராட்டையும் குவித்த நிலையில், தற்போது ரஜினியை வைத்து இயக்கி கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் (Coolie Movie Released) வெளியாகியது. பிற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக காலை 10 மணிக்கு திரையிடப்படும் காட்சிகள் 1 மணி நேரம் முன்னதாக 9 மணிக்கு திரையிடப்படுகிறது.
திருச்சியில் பெண்கள் பூக்கள் ஏந்தி, ஆண்கள் மேளதாளத்துடன் நடனமாட கூலி பட கொண்டாட்டம் :
#WATCH | Tamil Nadu | Women carry flowers and men dance to the sound of drums as they celebrate the release of actor Rajinikanth's new movie ‘Coolie’, in Tiruchirappalli pic.twitter.com/agEUpBeE1c
— ANI (@ANI) August 14, 2025
ரசிகர்கள் எதிர்பார்ப்பு :
அந்த வகையில் முதல் நாள், முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர். அமெரிக்காவில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் படம் வெளியாகி படத்தின் விமர்சனங்களும் வெளிவர தொடங்கிவிட்டன. ரஜினி, லோகேஷ் இணைந்து நடித்துள்ளது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இப்படம் தான் முன்னதாக இயக்கிய படங்களில் சந்தித்த விமர்சனங்களுக்கான பதிலாக இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வந்துவிடும்.
கனடாவில் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம் :
#Coolie Canada 🇨🇦 fireworks after FDFS response at York Cinemas 🔥🔥🔥🔥🙌@rajinikanth @Dir_Lokesh Seigai 🔥🔥🔥🔥🔥🔥#CoolieFDFS #CoolieReview #CoolieThePowerHouse pic.twitter.com/QIrViZN0B2
— Achilles (@Searching4ligh1) August 14, 2025
சூப்பர்ஸ்டாரின் கூலி பட FDFS கொண்டாட்டம் :
— Reble God 🦁 (@Pbadmirer01) August 13, 2025