Rinki Cheema Passed Away: பிரபல மிஸ் இந்தியா ரிங்கி சக்மா மரணம்... ரசிகர்கள் சோகம்..!

முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்.

Rinki Cheema (Photo Credit: Instagram)

மார்ச் 01, திரிபுரா (Tripura): ரிங்கி சக்மா 2017 ஆம் ஆண்டு முன்னாள் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு தற்போது வயது 25. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்தார். 2022 ஆம் ஆண்டில், அவருக்கு வீரியம் மிக்க பைலோட்ஸ் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, அதன் பிறகு அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் புற்றுநோய் நுரையீரலுக்கு பரவியது. அதன் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் கீமோதெரபியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. Drishyam Hollywood Remake: ஹாலிவுட்டில் ரீமேக்கில் த்ரிஷ்யம்.. குஷியில் ரசிகர்கள்..!

இந்நிலையில் பிப்ரவரி 22 அன்று சக்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.