Top 10 Movies: அடேங்கப்பா.. ரிலீசுக்கு முன்பு வரவேற்பை பெற்ற டாப் 10 படங்கள்.. ரிலீசுக்கு பின் என்ன ஆனது தெரியுமா?.!
நடப்பு ஆண்டில் வெளியாகிய இந்திய திரைப்படங்களில் வெளியீடுக்கு முன்பே மக்களிடம் அதிகளவிலான எதிர்பார்பை கிளம்பிய படங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
டிசம்பர், 7: உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படங்களை மதிப்பீடு செய்து, அதனை பட்டியலிடும் தளம் IMDb. நடப்பு ஆண்டில் வெளியாகிய இந்திய திரைப்படங்களில் வெளியீடுக்கு முன்பே மக்களிடம் அதிகளவிலான எதிர்பார்பை கிளம்பிய படங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தமிழ் மொழியில் ஒரேயொரு படம் இடம்பெற்றுள்ளது.
- KGF 2: கன்னட மொழியில் வெளியாகி, பின் பல மொழிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம் KGF. அப்படத்தின் தொடர்ச்சியாக 2022-ல் KGF Chapter 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு 8.4 ஸ்டார் கிடைத்துள்ளது. 1 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்த படம் இவ்வாண்டில் அதிக வசூலை குவித்த பெருமையை தக்கவைத்துள்ளது.
- ஆர்.ஆர்.ஆர் (RRR): ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்ரம் என்ற ஆர்.ஆர்.ஆர். இப்படத்திற்கு 8 ஸ்டார் கிடைத்துள்ளது. வசூலில் ஆயிரம் கோடியை கடந்து சாதனை புரிந்துள்ளது. 1 இலட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது.
- லால் சிங் சத்தா (Lal Singh Chaddha): அமீர்கானின் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியான லால் சிங் சத்தா படம் 5.4 ஸ்டார்களை பெற்றுள்ளது. இப்படம் மக்களிடம் வெளியீடுக்கு முன்பு அதிக வரவேற்பை பெற்று இருந்தாலும் தோல்வியை சந்தித்தது.
- கங்குபாய் கைத்வாடி (Gangubai Kathiawadi): இந்தி நடிகை ஆலியா பட்-டின் அட்டகாசமான நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான படம் கங்குபாய் கைத்வாடி. இவர் இப்படத்தில் விபச்சாரியாக நடித்திருந்தார். உண்மை கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு 7 ஸ்டார்கள் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு 54 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த படம் வெளியான பின்பு ஓரளவிலான வரவேற்பையே பெற்றுள்ளது. Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!
- பீஸ்ட் (Beast): இந்த ஆண்டுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்ப்படம் பீஸ்ட் மட்டும்தான். இப்படம் ரிலீசுக்கு முன்பு எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், படம் வெளியானதுக்கு பின்பு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து தோல்வியை தழுவியது.
- தக்கட் : நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தக்கட் திரைப்பட, கங்கானாவின் ஏறுமுகத்தால் வெற்றியடையும் என இந்தி திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், படத்தின் வெளியீடுக்கு பின்னர் அது தலைகீழாக மாறி தோல்வியை சந்தித்தது.
- ராதே ஷியாம் (Radhe Shiyam): பிரம்மாண்ட படங்களின் நாயகன் என்று வருணிக்கப்படும் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ராதே ஷியாம். இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தால் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பு மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகளவில் கிளப்பியிருந்தது.
- பிரம்மாஸ்திரா (Brammasdra): ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம், பாலிவுட்டில் பிரம்மாண்ட படமாக எடுக்கப்பட்டது. இப்படம் வெளியீடுக்கு முன்பு அதிகளவில் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு பின் ரூ.400 கோடி அளவில் வசூல் செய்தது.
- ஹீரோபண்டி 2 (HeroPanti 2): நடிகர் டைகர் ஷெராப் நடிப்பில் வெளியாகிய ஹீரோபண்டி 2 படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால், அதனை வைத்து இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது. ஆனால், முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் வெளியாகும் முன்பு வரவேற்பை பெற்றாலும், வெளியீட்டுக்கு பின் வரவேற்பை பெறவில்லை.
- ஆதிபுரூஷ் (AdiPurush): நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத் கூட்டணியில் உருவாகிய படம் ஆதிபுரூஷ். இப்படம் அனிமேஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ரீ இராமர் வேடத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். இப்படம் வெளியீடுக்கு முன்பு மக்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பினையும், அதன் ட்ரைலர் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. படம் வெளியான பின்பே அது வெற்றியா? தோல்வியா? என்பது தெரியவரும்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 07:58 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)