Emmy Awards Received by Ekta: எம்மி விருதை பெற்ற முதல் பெண் தயாரிப்பாளர்: இந்தியாவுக்கே கெளரவம்.! விபரம் இதோ.!
1974 ஆண்டுகளில் அமெரிக்காவில் பணியாற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலில் எம்மி விருதுகள் வழங்கப்பட்டு, பின் சர்வதேசமயமாக்கப்பட்டன.
நவம்பர் 21, நியூயார்க் (Cinema News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், 51வது சர்வதேச அளவிலான எம்மி விருது (Emmy International Awards) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவில் 1974 ஆண்டுகளில் தொலைக்காட்சியில் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டி வழங்கப்பட்டு வந்த எம்மி விருதுகள், பின்னாளில் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான எம்மி விருதுகள் வழங்கும் விழா, இன்று நியூயார்க் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், இந்தியாவில் நாகினி உட்பட பல்வேறு தொடர்களை தயாரித்து வழங்கிய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விருதை பெற்றுள்ளார். Aquaman and the Lost Kingdom: அட்டகாசமான கடல் பயணத்திற்கு தயாரா? ரசிகப்பெருமக்களே.. அக்வாமேன் லாஸ்ட் கிங்டம் படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.. டிசம்பரில் திரை விருந்து.!
அதாவது, ஹிந்தி திரையுலகில் தொலைக்காட்சித்தொடர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏக்தா கபூர் (Ekta Kapoor), சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் என்ற எம்மி விருதை பெற்றுள்ளார். இந்தியா முதல் முறை இவ்விருதை பெறுகிறது.
எம்மி விருதுகளை இந்தியாவின் சார்பில் பெரும் முதல் பெண்மணியாக, தயாரிப்பாளர் பிரிவில் முதல் விருதை பெற்றுள்ளார். இது ஒட்டுமொத்த இந்திய தொலைக்காட்சி குழுவினரை வியப்படைய செய்துள்ளது. இதனால் இந்தியா எம்மி விருதுகளில் தடம்பதிக்க தொடங்கியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு சிறந்த காமெடி நடிகருக்கான எம்மி விருதுகள் விர் தாஸ் (Vir Das) பெற்றார். அவரே நடப்பு ஆண்டுக்கான சிறந்த காமெடி நடிகருக்கான எம்மி விருதுகளை மீண்டும் தட்டிச்செல்கிறார்.
தயாரிப்பாளர் ஏக்தா இந்தியாவுக்காக தனது முதல் வெற்றியை பெற்ற நிலையில், அதே உற்சாகத்துடன் நாடுதிரும்பவுள்ளார்.