Jailer Amazon Release: ஜெயிலர் திரைப்படம் அமேசானில் வெளியாவது எப்போது?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே..!
சூப்பர்ஸ்டார் என்றுமே உச்சநட்சத்திரம் தான் என்பதை நிரூபணம் செய்யும் வகையில், ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி அமைந்துள்ளது.
செப்டம்பர் 02, சென்னை (Cinema News): சன் பிக்சர்ஸ் (Sun Pictures) தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில், அனிரூத் (Anirudh) இசையில், நெல்சன் (Director Nelson) திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளை அலங்கரித்துள்ள திரைப்படம் ஜெயிலர் (Jailer).
இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், வசந்த் ரவி, விநாயகன், ஜாபர், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, ஜாக்கி ஷெரீப், சுனில், கலையரசன், கிஷோர், மாரிமுத்து, சரவணன், விடிவி கணேஷ், மகாநதி சங்கர், அறந்தாங்கி நிஷா, பில்லி முரளீ, நமோ நாராயணா, டான்சர் ரமேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர். Women Died Toilet: இரயில் கழிவறையில் 25 வயது பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?.. பராமரிப்பு பணியில் பதறிப்போன இரயில்வே அதிகாரிகள்.!
கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ் குமார் (Shivarajkumar), மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் (Mohan Lal) ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இவர்களின் கதாபாத்திரத்தில் ஷிவ்ராஜ்குமாரின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. ரூ.240 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம், உலகளவில் பல நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
தற்போது வரை படம் ரூ.600 கோடி வரையில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் மாபெரும் வெற்றி தயாரிப்பு நிறுவனத்திடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு விலைஉயர்ந்த காரை பரிசாக வழங்கினார். இதற்கிடையே, படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி அமேசானில் வெளியாகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)