Janhvi Kapoor visited Tirupati: அடையாளம் காண முடியாத பாரம்பரிய தோற்றத்தில்: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பாலிவுட் நடிகை..!

தேவாரா படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் பிரபல நடிகை ஜான்வி கபூர், தனது காதலனான ஷிக்கர் பகாரியாவுடன் பாரம்பரிய உடையில் பலத்த பாதுகாப்போடு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

Actress Janhvi Kapoor (Photo Credit: ANI Twitter)

(ஆகஸ்ட் 28, திருப்பதி) (Cinema News): பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) கடந்த சில நாட்களாக ‘தேவாரா’ படப்பிடிப்பு காரணமாக ஹைதராபாத்தில் (Hyderabad) தங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் (Jr. NTR) மற்றும் சைப் அலி கான் (Saif Ali Khan) ஆகியோருடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இது ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நடிக்கவிருக்கும் முதல் படமாகும்.

இவர் ஷிக்கர் பகாரியாவுடன் (Shikhar Pahariya) காதலில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் வதந்திகள் பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இதே போல காதலனுடன்  திருப்பதி கோயிலுக்கு சென்ற புகைப்படங்களும்  வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி  ரசிகர்கள் இடையே வைரலாகி இருந்தது. Nambi Congrats to Adithya L1 Mission: சூரியனை ஆராயும் இஸ்ரோ; மனதார பாராட்டு தெரிவித்த நம்பி நாராயணன்.!

இன்று அதிகாலை ஜான்வி கபூர் தனது ரகசிய காதலரான ஷிக்கர் பகாரியாவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட எளிமையான தோற்றத்தில் பலத்த பாதுகாப்புடன் இருவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif