Maamannan: மக்களின் மனதை கவர்ந்து வெற்றிவாகை சூடிய மாமன்னன் திரைப்படம்; மக்கள் அமோக வரவேற்பு.!
உதயநிதி ஸ்டாலினின் அமைச்சர் பொறுப்புக்கு பின்னர் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம், தற்போதைக்கு அவரின் இறுதி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.
ஜூன் 29, சென்னை (Cinema News): மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி, ஏ.ஆர் முருகதாஸ் உட்பட பலர் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்னன்.
உதயநிதி ஸ்டாலினின் அமைச்சர் பொறுப்புக்கு பின்னர் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம், தற்போதைக்கு அவரின் இறுதி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மாமன்னன் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாரி செல்வராஜ் பேசிய வாசகம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்திய காரணத்தால், தென்மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. Trending Video: என்ன வயசுடா தம்பி உனக்கு?.. ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் சிறுவன்; வைரல் வீடியோ.!
இந்த நிலையில், பல எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீடுக்கு முன்பு அதனைப்பார்த்த பலரும் படம் சிறந்து உருவாகியுள்ளதாக புகழ்ந்தனர். நடிகர் தனுஷ் இடைவேளை பகுதி சிறப்பு மிக்கது என்று கூறினார். இன்று படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
என்னதான் பெரிய நடிகர்கள் அல்லது சிறிய நடிகர்கள் நடித்த படமாக இருந்தாலும், அதற்கு விளம்பரம் என்பது முக்கியம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மொழியில் வெளியாகும் சில குறைந்த பட்ஜெட் படங்கள், விளம்பரத்திற்காக சர்ச்சையை கிளப்பி பைசா செலவில்லாமல் மக்கள் மனதை சென்றடைகிறது.