Ponniyin Selvan 2: சதிச்செயல்களை சுற்றி சோழம்.. இறுதியில் நந்தினி, ஆதித்த கரிகாலனுக்கு நடந்தது என்ன?; பொன்னியின் செல்வன் 2..!

வந்தியத்தேவர் தான் குந்தவைக்கு அளித்த வாக்குறுதி, பொன்னியின் செல்வரின் ஆணை ஆகியவற்றை நிறைவேற்றினாரா? என்பதே பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகும்.

Ponniyin Selvan Part 2 | LatestLY Tamil Review

ஏப்ரல் 28, சென்னை (Cinema News): கல்கியின் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவலை தழுவி, மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி (Jayam Ravi) அருண்மொழி தேவர் என்ற இராஜராஜ சோழராகவும், விக்ரம் (Vikram) ஆதித்த கரிகாலராகவும் (King Aditya Karikalan Chozha), பிரகாஷ் ராஜ் சுந்தர சோழராகவும், கார்த்திக் வாணர் குல இலவசரன் வந்தியத்தேவனாகவும் (Vallavaraiyan Vandiyadevan), ஐஸ்வர்யா ராய் பழுவேட்டயரையரின் மனைவி நந்தினியாகவும் (Nandhini), திரிஷா குந்தவை பிராட்டியாராகவும், சரத் குமார் மற்றும் பார்த்தீபன் பெரிய மற்றும் சின்ன பழுவேட்டயரையராகவும் (Paluvettaraiyar) நடித்திருந்தனர்.

பல்லவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் சோழர்களின் எழுச்சி (Chozha Empire) மற்றும் சோழர்களின் எழுச்சியின் போது நடந்த பல நிகழ்வுகள், போர்கள் குறித்த தகவலை கொண்டிருந்த பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப எவ்வித பிரச்சனை மற்றும் பாகுபாடுகளுக்கும் இடம் அளிக்காமல் எடுக்கப்பட்ட வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து, இன்று (28-04-2023) பொன்னியின் செல்வனின் இரண்டாம் (Ponniyin Selvan 2) பாகம் வெளியானது. Delhi Metro: கருமம், கண்றாவி.. என்ன நடக்கிறது டெல்லி மெட்ரோவில்?.. அடுத்தடுத்து லீக்காகும் ஆபாச விடியோக்கள்.. காம களியாட்டம்.!

முதல் பாகத்தில் சோழ சாம்ராஜ்யத்திற்கு ஆசைப்படும் மதுராந்தகருக்கு ஆதரவாக சிற்றரரசர்கள் கடம்பூர் மாளிகையில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பின்னணியில் வீர பாண்டியனை கொலை செய்து பாண்டிய (Pandia Empire) சாம்ராஜ்யத்தை சோழர்கள் கைப்பற்றியதற்காக, சோழர்களை ஒட்டுமொத்தமாக கதைமுடிக்க சதிகள் நடைபெறுகின்றன. இந்த சதியில் இருந்து சோழர்கள் மீண்டது எப்படி? ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆனது? என்பது தொடர்பான மீதி கதையே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்.

முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தாலும், விபரம் தெரிந்த தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் பலரும் வரலாற்றில் நடந்தது தற்போதைய மரபுக்கேற்ப இரண்டு பாகத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு கதையாக்கி தரப்பட்டுள்ளன. இவை வரலாற்றை அறிய வழியே தவிர்த்து, இவை வரலாற்றில் நடந்த முழுவதையும் மாற்றாமல் கூறவில்லை. இடத்திற்கேற்ப காட்சிகள் மாற்றப்பட்டு, இறுதியில் அவை வரலாற்றை தொடர்புபடுத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தை நாம் படமாக எடுத்துக்கொண்டு பார்க்கும் பட்சத்தில், அவை தரமாகத்தான் இருக்கிறது. முதல் பாகத்தில் பொன்னியின் செல்வனுக்கு வெற்றியை கொடுத்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை, இரண்டாவது பாகத்தில் லேசாக தொய்வடைந்துவிட்டதை போல பார்வையாளர்களுக்கு உணரப்பட்டது. காட்சிகளின் வேகம் சதிச்செயல்களை விளக்க வேண்டும் என்ற கோணத்தில் சில இடங்களில் தொய்வை சந்திக்கிறது. இறுதியில் படம் போருடன் நிறைவு பெற்று மதுராந்தக சோழருக்கு முடிசூட்டுவதோடு நிறைவு பெறுகிறது. இராஜஇராஜ சோழரின் பெருமைகள் 2 நிமிட காட்சிகளாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. Deepawali America: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப ஒளித்திருநாளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு; கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!

பாண்டியர்களுக்கும் - சோழர்களுக்கும் வரலாற்றில் நடந்த பிரச்சனையில், பல்வேறு சதிச்செயல்கள் அரங்கேறிய காலம் என்றால் அவை பொன்னியின் செல்வன் தொடர்புபடுத்திய காலம் தான். ஆதித்த கரிகாலனின் மறைவு தொடர்பான சர்ச்சை இன்று வரை இருந்தாலும், சர்ச்சைக்கு வித்திடாமல் படத்தை நகர்த்தியது மணி ரத்தினத்தின் தந்திரம் தான். இறுதியில் உண்மையை உணர்ந்த நந்தினியும் தனது முடிவை தானே தேடிக்கொள்வதுதான் ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின் வரலாற்று நிதர்சனம்.

வரலாற்றை தொடர்புபடுத்தி பொன்னியின் செல்வனை பார்க்க செல்லாமல், பாகுபலி போல கதை என்று எண்ணி சென்றால் இரண்டு பாகமும் மக்களுக்கு வெற்றி தான். பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் முதல் பகுதி லேசான தொய்வை தந்தாலும், இரண்டாம் பகுதி விறுவிறுப்புடன் நகர்ந்து நம்மை திரையோடு கட்டிபோடுகிறது. மக்களின் எதிர்பார்ப்பை பிரம்மாண்டமாக பாகுபலி போல பூர்த்தி செய்யவில்லை என்பதற்கு இது பாகுபலியை போல கதை இல்லை. தமிழர்கள் என்று நம்மை அடையாளப்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று வீர சோழம்.

அன்றைய நாட்களில் பாண்டிய நாடு, சோழநாடு என பிரிந்து இன்று தமிழ்நாடு என்ற வார்த்தையால் ஒன்றுபட்டு கிடக்கும் நமது வரலாற்றை தேடி கண்டறிந்து, அவற்றை திரைப்படங்கள் வாயிலாக கொண்டு சேர்க்க பொன்னியின் செல்வன் திரைப்படம் அடித்தளமிட்டுள்ளதே அதன் வெற்றி. அதற்கு தான் எமது குழுமம் அதனை பாராட்டி 4 மதிப்பெண் வழங்கி இருக்கிறது. தமிழர்களின் வரலாறுகள் கண்டறியப்பட்டு, எதிர்கால தலைமுறைக்கு அவை கட்டாயம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல் வெளிநாட்டு மன்னர்களைத்தான் மண்ணின் மைந்தராக, வளர்ச்சியின் ஊதுகுழலாக இறுதிவரை போற்றிக்கொண்டு இருப்போம். Mobile Bacteria: பொது கழிவறையை விட ஆபத்தான வைரஸ்களை கொண்டிருக்கும் செல்போன்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் தொடர்பான பேச்சு வரும்போதே, மணிரத்னத்தை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தனக்கு வழங்கும்படி கோரிக்கை வைத்ததாக கூறியிருந்தார். வந்தியத்தேவனின் கதாபாத்திரம் ஒருவேளை ரஜினிக்கு வழங்ப்பட்டு இருந்தால், அது பொருந்தியிருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். கதைக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமைந்துள்ளது.

முடிவு: ஆட்சியை கேட்டு நடக்கும் பங்காளி சண்டையில், பாண்டியர்களின் சூழ்ச்சியும் சேர்ந்து விளையாடினாலும், வீர சோழம் அதனை தீரத்துடன் எதிர்கொண்டு வெற்றியடைந்துவிட, வாய்ப்பு கிடைக்கிறது என போர்தொடுத்த எதிர்தரப்பு இறுதியில் சோழத்தின் ஒற்றுமையால் பல நூறு ஆண்டுகளுக்கு இருந்த இடம் தெரியாமல்காணாமல் போயின என்பது வரலாறு.