அக்டோபர் 14, திருப்பதி (Cinema News): இயக்குநராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் நடிகராக கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் டியூட் (Dude Movie) திரைப்படத்தில் நடித்து வந்தார். கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, நேகா செட்டி, சரத்குமார், ரோகிணி உட்பட பலர் நடிக்க இப்படம் தயாராகியுள்ளது. ஜனவரி மாதம் இப்படம் ஓடிடியில் நெட்பிளிக்ட்ஸிலும் வெளியிடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு 17 அக்டோபர் 2025ம் தேதி படம் உலகளவில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை சாய் அபிசங்கர் மேற்கொண்டுள்ளார். காதல், காமெடி, அட்ராசிட்டி, அதிரடி என பிரதீப் ரங்கநாதனின் அட்டகாசமான நடிப்புடன் வெளியாக உள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகிறது. இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. Bigg Boss 9: புத்தி இல்லனா எப்படி புரியும்?.. காரக்குழம்பு கனியை வம்பிழுத்த விஜே பார்வதி.. காரசார பஞ்சாயத்து வீடியோ.!
சரத் குமாரின் சரவெடி பேச்சு (Sarath Kumar Pradeep Ranganathan Dude Movie Telugu Pressmeet Video):
அப்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப் ரங்கநாதனிடம், "நீங்கள் ஹீரோ கிடையாது. நீங்கள் முன்னேற கடின உழைப்பு காரணமா? அல்லது அதிர்ஷ்டம் காரணமா?" என நக்கலாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் கடுப்பான சரத்குமார், "உருவத்தை வைத்து ஹீரோ என்ற விஷயத்தை முடிவு செய்ய முடியாது. பிரதீப் ஒரு இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 3 மெகா ஹிட் படங்களையும் அவர் கொடுத்துள்ளார். நான் பல ஆண்டுகளாக திரைஉலகில் இருக்கிறேன். பெரிய ஹீரோ மெட்டீரியல் கூட தர முடியாத காலத்தில் அவர் தனது வெற்றியை கொடுத்துள்ளார். இது உங்களது தெலுங்கு திரையுலகுக்கும் பொருந்தும். ஹீரோ என்று காட்டுவதற்கு ஏதாவது தகுதிகள் யாரிடமும் உள்ளதா? இங்குள்ள அனைவரும் ஹீரோக்கள் தான். மக்களுக்கு பிடித்த, மக்களுக்கான விஷயங்களை முன்னெடுக்கும் ஒவ்வொருவரும் ஹீரோதான்" என பேசியிருக்கிறார். இந்த விஷயம் தற்போது கவனம் பெற்று வருகிறது.
சரத்குமார் செய்தியாளரின் கேள்விக்கு பேட்டி அளித்த வீடியோ:
Super @realsarathkumar sir!#dude Hyderabad promotion pic.twitter.com/vcx62yEv6u
— Johnson PRO (@johnsoncinepro) October 11, 2025