YouTuber Biryani Man Arrested: யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயற்சி.. யூடியூபர் பிரியாணி மேன் கைது.. காரணம் என்ன?!
பிரபல யுடியூபர் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 31, சென்னை (Entertainment News): இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், பலர் யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டு தங்களுக்கான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அதே சமயம், தங்களுக்கு போட்டியாக உள்ள யூடியூப் சேனல்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவது என சிலர் தொடர்ந்து வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இர்பான் VS பிரியாணி மேன்: சமீபத்தில் யூடியூப்பர்களான இர்பான் மற்றும் பிரியாணி மேன் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு யூடியூப்பர் இர்பானின் (Irfan) கார் மோதி மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த காரை ஓட்டி வந்தது இர்பானின் மச்சான் தான் என்பதால், இர்பான் கைது செய்யப்படவில்லை. சிலர் இர்பான் தான் காரை ஓட்டி வந்ததாக கூறி அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், பிரியாணிமேன் அபிஷேக் ரபி அண்மையில், இந்த விபத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு இர்பானும் பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து வந்தனர்.
டெய்லர் அக்கா VS பிரியாணி மேன்: அதேபோல் டெய்லர் அக்கா என்பவர் யூடியூப் சேனல் நடத்தி அதில் டெய்லரிங் குறித்த பதிவுகளை வெளியிட்டு, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் ப்ளவுஸ் தைத்து கொடுப்பது போல் ஆபாச வீடியோ வெளியிடுவதாக பிரியாணி மேன் புகார் தெரிவித்திருந்தார். மேலும் டெய்லர் அக்காவை கடுமையாக தாக்கி பேசினார். New Resolutions of TFPC: ஆகஸ்ட் 16 முதல் பட பூஜை இல்லை; 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில் வெளியீடு.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!
தற்கொலை முயற்சி: இந்த பஞ்சாயத்து பெரிதாகி போன நிலையில், யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் பிரியாணி மேன். இந்த வீடியோவை நேரலையில் பார்த்த அவரது நண்பர்கள் பதறியடித்து பிரியாணி மேன் அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை கூறி இருக்கிறார்கள். இதனால் பதறிப்போன தாய் கதவை தட்டி, அவரின் தற்கொலை முயற்சியை தடுத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
பிரியாணி மேன் கைது: இந்நிலையில் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட 4 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படும் போது முதலில் வர மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் முறையான புகார் விவரங்களை தெரிவித்த பின்பே கைதாகி செல்ல ஒப்புக்கொண்டுள்ளார்.