Tamil Film Producers Council Logo (Photo Credit: Facebook)

ஜூலை 30, சென்னை (Cinema News): சென்னையில் நேற்று நடைபெற்று முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க (Tamil Film Producers Council) கூட்டுக் கூட்டத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் கொண்டுவரப்பட்டது. TFPC Lays Restrictions On Dhanush: நடிகர் தனுஷை வைத்து படமெடுக்க புது நிபந்தனை; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை..!

இதில் முதல் தீர்மானமாக, தமிழ் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரத்திற்கு பிறகே, ஓடிடி (OTT) தளங்களில் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற நவம்பர் 01-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டும் எனவும், தமிழ் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் குறித்து முடிவெடுக்கும் வரை படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. திரையரங்குகள் கிடைக்காமல் பல திரைப்படங்கள் தேங்கியுள்ளதால் புதிய பட பூஜைகள் நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கமளித்துள்ளது.