Tiger 3 Trailer Out Now: "புலி சுவாசிக்கும் நாள் வரை தோல்வியை ஏற்காது" - மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சல்மான் கானின் டைகர் 3 ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!

கத்ரீனா கைப், சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள டைகர் 3 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது.

Tiger 3 Trailer Stills (Photo Credit: YouTube)

அக்டோபர் 16, மும்பை (Cinema News): மணீஷ் ஷர்மா (Director Maneesh Varma) இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் (Yash Raj Films) தயாரிப்பில், ப்ரீதம் இசையில், ரூ.300 கோடி பொருட்செலவில் அட்டகாசமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3 (Tiger 3). படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இப்படத்தில் சல்மான் கான் (Salman Khan), கத்ரினா கைப் (Katrina Kaif), இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, ரிதி தோக்ரா, விஷால் ஜெத்சவா, குமுந்த் மிஸ்ரா, ரன்வீர் ஷோரேவ், ஆனந்த் விதார், வரீந்தர் சிங் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். ஷாருக்கான் (Shah Rukh Khan) சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. UP Police Encounter & Arrest: தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்..!

சமீபத்தில் இப்படத்தின் டீசர் காட்சிகளும் வெளியாகின. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்தில், சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். அதேபோல, சல்மான் கானின் படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார் என தெரியவருகிறது.

படம் தீபாவளி 2023 பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் 16 அக். அன்று மதியம் 12:00 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், படத்தின் ஹிந்தி டிரைலர், படத்தயாரிப்பு குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரில் இறுதியில் "புலி சுவாசிக்கும் நாள் வரை, ஒருபோதும் தோல்வியை ஏற்காது" என சல்மான் கான் வசனம் பேசியுள்ளார்.