Santhosh Narayanan visits SriLanka: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. விரைவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
செப்டம்பர் 25, யாழ்ப்பாணம் (Cinema News): இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ் திரையுலகில் தனது ட்ரெண்டிங்கான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் நேற்று இலங்கையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, ஈழத் தமிழர்களின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதி, திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
செப்டம்பர் 30ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தார். தற்போது இந்த இசை நிகழ்ச்சி அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு முற்றுவெளி மைதானத்தில் “யாழ் கானம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கிறது. Tiruppur Shocker: சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலம்; வடமாநில பெண் கற்பழித்து கொலை?.. திருப்பூரில் பயங்கரம்.!
நேற்று சந்தோஷ நாராயணன் அவரது மனைவி மீனாட்சியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இவரது மனைவி ஈழத் தமிழர் ஆவார். யாழ்ப்பாணம் மற்றும் தமிழர்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் திலீபனின் நினைவு வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1987-இல் இந்தியாவின் அமைதிப்படை இலங்கை பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது, இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்து, ஒரு துளி நீர் கூட அருந்தாமல், உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் தியாகம் செய்தார் திலீபன்.
நேற்று யாழ்ப்பாணம் சென்ற சந்தோஷ் நாராயணன் மனைவியோடு நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருக்கும் இசைக் கலைஞர்களோடு “யாழ் கானம்” நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் இசையமைப்பாளர் ஒருவர், பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்த விருப்பது குறிப்பிடத்தக்கது.