மார்ச் 27, சென்னை (Television News): தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, உலகளவில் திரைப்படங்கள், சீரியல்கள் என பல துறைகளில், பெண்களை தங்களின் இச்சைக்கு பயன்படுத்தி, வாய்ப்புகளை கொடுப்பதாக மோசடி செயலில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மீ டூ இயக்கம், இன்று வரை எதை கண்டறிந்தது என தெரியாமல், தொடர்ந்து கிடைத்த புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளது. அவ்வப்போது, சில நடிகைகளின் மீது அவதூறு பரப்ப திட்டமிடப்பட்டு அல்லது மிரட்டப்பட்டு சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் என்ற பெயரில் வெளியாகுவதும் தொடருகிறது. திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை, திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறும் செயலில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், அலாவுதீன் பூதம் மர்மக்கதை போல தொடரும் மர்மங்கள், சில நேரம் நடிகைகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்பத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிடுவதும் இன்றளவில் தொடருகிறது. Vairamuthu: "மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா?" - மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு, கவிஞர் வைரமுத்துவின் கலங்கவைக்கும் இரங்கல் குறிப்பு.!
அதிர்ச்சிதரும் ரெட்டிட் பதிவுகள்:
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ஒன்றில், முக்கிய கதாபாத்திரத்தின் துணை நடிகையாக நடிக்கும் ஒருவரின் அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பதறவைத்துள்ளன. நடிகையை திரைப்பட வாய்ப்பு தருகிறேன் என மோசடி நபர் ஒருவர் அணுகி மேற்கொண்ட செயல்கள் குறித்த கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மோசடி நபர்களின் செயலில் நடிகை ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில் தான் நடிகை தனக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி இருக்கிறது எனவும் தனியார் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார். இதனிடையே, அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எண்ணத்துடன், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட காட்சிகள் என சில விடியோக்களை வெளியிட்டு இருக்கின்றனர். பெண்ணை திட்டமிட்டு வாய்ப்பு தருவதாக உறுதி அளிக்கும் கும்பல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
தொடரும் துயரங்கள்:
பல திரைத்துறை மர்மங்களில் ஒன்றாக தொடரும் இவ்விஷயத்திலும், பாதிக்கப்படும் பெண்ணின் மீது அவதூறு பரப்ப ஒரு கூட்டமே காத்திருக்கிறது. பெண்களை ஏளனப்படுத்தி பார்க்கும் நபர்கள், கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளத்தில் இவ்விசயம் குறித்தே அதிகம் பேசியும் வருகின்றனர். உண்மையா? பொய்யா? என்பது கூட தெரியாமல், பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் மனதை ரணமாக்கும் விஷயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சர்ச்சை செயல்களுக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேநேரத்தில், திரைத்துறையில் பாலியல் புகார்கள் சிக்குவோர் மீது விசாரணை எதோ ஒரு அழுத்தத்தால் நடைபெறாமல் இருப்பதே, இவ்வாறான பாலியல் அத்துமீறல் / அவதூறு பரப்புதலுக்கு காரணமாக அமைகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், தமிழ் திரையுலகில் உச்ச நடிகைகளாக வலம்வந்த சில நடிகைகளின் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் குறித்து நடிகை தரப்பில் ஆன்லைன் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.