India's Shakti Wins at Grammys 2024: கிராமி விருது 2024.. இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது..!
பிரபல இசை விருதான 'கிராமி' விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 05, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 66-வது 'கிராமி' விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சக்தி குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற ஆல்பத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆல்பம் ஜூன் 30, 2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இசைக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினராலும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது, அவர்கள் அந்தந்த சொந்த ஊர்களில் இருந்து தங்கள் பங்களிப்புகளை அனுப்பியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், சக்தி 27 நகரங்களில் 50வது ஆண்டுவிழா சுற்றுப்பயணத்தை நடத்தியது. இதில் பில் ஃபிரிசெல், பெலா ஃப்ளெக், ஜான் ஸ்கோஃபீல்ட் மற்றும் ஜெர்ரி டக்ளஸ் ஆகியோரின் தனி ஓப்பனிங் ஸ்லாட்டுகளுடன் 17 அமெரிக்க நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. Premalatha Vijayakanth Tattoo: கேப்டன் முகத்தை பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!
சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் சக்தி இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இசையமைப்பாளர் செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.