
மே 16, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (மே 16) காலை 9:00 மணிக்கு வெளியிட்டது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும், 'TN SSLC Result' மொபைல் செயலி மூலமாகவும் முடிவைப் பார்க்கலாம். Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில், எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 93.8 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், 98.31% தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. 2024ஆம் ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது.