
மே 16, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு (SSLC), மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (மே 16) வெளியிட்டது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. 10ஆம் வகுப்பு முடிவுகள் காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது. மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இரண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம். 10th Board Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. முதலிடம் பிடித்த சிவகங்கை.. 98.31% தேர்ச்சி..!
மாணவிகள் முதலிடம்:
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 2025ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.09% ஆகும். இதனை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இத்தேர்வில் மாணவிகள் 95.13%, மாணவர்கள் 88.70% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.92% அதிகரித்துள்ளது. மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை மதியம் 2 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பெறலாம்.