IIFA Utsavam 2024: “காமெடி சாம், சர்ச்சைக்குரிய சாம்… அவள் தூங்கப் போய்விட்டாள்..” சமந்தாவின் துணிச்சலான வைரல் வீடியோ..!

துபாயில் நடந்த IIFA உற்சவம் 2024-ல், சமந்தா ரூத் பிரபு இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருதைப் பெற்றார்.

Samantha Ruth Prabhu, Rana Daggubati (Photo Credits: X/@HeartNaniSam)

நவம்பர் 07, அபுதாபி (Cinema News): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஃபா விருது வழங்கும் விழா வருடம் வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது (IIFA Utsavam) அபுதாபியில் ஆம் யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், மணி ரத்னம், பிரபுதேவா, சதீஷ், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி, ஜாவேத் அக்தர், கரண் ஜோஹர், அனன்யா பாண்டே மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதாவது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

IIFA உற்சவம் 2024-ல் இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருதை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) பெற்றார். இந்த விருதை விக்கி கவுஷலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அப்போது பேசிய சமந்தா ரூத் பிரபு, “மீண்டும் வருவது நல்லது. கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. நான் ஒரு நீண்ட இடைவெளி எடுத்துவிட்டேன். ஆனால், நான் திரும்பி வந்துவிட்டேன்! ஒரு பெண்ணாக, ஒரு நடிகராக, இது உயர்வும் உச்சமும் நிறைந்த ஒரு பாதை, ஆனால், நிச்சயமாக சவால்கள் நிறைந்தது. உங்கள் கனவு மிகப் பெரியதாக இருக்கலாம், அநேகமாக அவை மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், விடாமுயற்சியின் உண்மையான அர்த்தத்தை நான் அங்குதான் கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன். Singer Guru Gugan Case: திருமணம் செய்வதாக கூறி பெண்ணிற்கு மோசடி செய்த பிரபல பாடகர்.. பெண்ணின் பகீர் வாக்குமூலம்.!

இந்த விருது எனக்கு மட்டுமல்ல, கனவு காணத் துணிந்த, தடைகளை எதிர்கொண்ட, எல்லைகளை உடைத்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது. இந்த பயணத்தில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், கடுமையான போர்கள் நமக்குள்ளேயே இருக்கும். எத்தனை முறை விழுந்தாலும், அல்லது எத்தனை முறை அவர்கள் உங்களை விழ வைத்தாலும், மீண்டும் எழுந்திருங்கள்! நான் எல்லா பெண்களுக்கும் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் கற்பனை செய்வதைவிட நீங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்” என்று சமந்தா உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

சமந்தா ரூத் பிரபு தனது உரையை முடித்து மேடையை விட்டு வெளியேறத் தயாராக இருந்தபோது, ராணா டக்குபதி தடுத்தார். பின் சமந்தா, “நான் உணர்ச்சிவசப்பட்டு பேசினேன், இப்போது காமெடி செய்ய வேண்டாம்” என்றார். இதற்கு பதிலளித்த ராணா டக்குபதி, “சமந்தா டோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்றார். என் மைத்துனியாக இருந்து சகோதரியாகப் போய்விட்டார்.” என்று அனைவரையும் சிரிக்க வைத்தார். மேலும் ராணா கூறுகையில், “நாங்கள் குழந்தை பருவத்திலிருந்தே நான் சமந்தாவை இரக்கமற்ற பிரபு என்று கூப்பிடுவேன், ஆனால், காமெடி சம் எங்கே போனார்?” என்று கேட்டார். அதற்கு சமந்தா, பதிலளித்தார், “காமெடி சம், சர்ச்சைக்குரிய சாம்… அவள் தூங்கப் போய்விட்டாள், குட் நைட்.” என்று கூறினார்.

சமந்தா நடிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் சிட்டாடல் ஹனி பன்னி இன்று வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. மேலும், வருண் தவான், கே.கே.மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘Citadel: Honey Bunny’ - கடந்த 2022-ம் ஆண்டு ரிச்சர்ட், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான இணையத் தொடர் ‘சிட்டாடல்’.

சமந்தாவின் துணிச்சலான வைரல் வீடியோ: