நவம்பர் 07, சென்னை (Cinema News): சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குரு குகன். 26 வயதான இவர் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர். சென்னையில் வாரந்தோறும் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியிலும் பல இசையமைப்பாளர்களின், நேரலை இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், பாடகர் குரு குகன் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இளம்பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் கூறியதாவது, "சமூக வலைத்தளங்களில் பிரபலமானவரும், சரிகம உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான குருகுகன் ஒரு பப்ளிக் ஷோவில், கடந்த மே மாதம் பார்த்தார். பார்த்த உடனே என்னுடைய செல்போன் நம்பரை வாங்கினார். பிறகு என்னிடம் நட்பாக பேசினார். பெற்றோர் எனக்கு திருமண வரன் பார்ப்பதாகவும், எனக்கு உங்களை பிடித்து இருப்பதாகவும் கூறினார். நான் வேறு சாதி.. எனவே உங்கள் பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறினேன்.
அதற்கு அவர் சாதியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்றாலும் நான் உன்னை திருமணம் செய்வேன். வீட்டில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உன்னை தனிக்குடுத்தனத்திற்கு அழைத்து சென்று உன்னை பார்த்து கொள்வேன் என்று கூறினார். ஜூலை மாதத்தில், இது இண்டென்ஷன் எதுவும் கிடையாது, நாம இனி எப்படியும் திருமணம் செய்துகொள்ளப்போறோம் என்று நெருங்கி பழகினார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதற்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் கர்ப்பத்தை கலைத்துவிடலாம் என்று சொன்னார். முன்பு நாங்கள் பேசிக்கொண்டபோது ஆகஸ்டு மாதத்தில் தான் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வோம் என்று பேசியிருந்தோம். Thug Life Teaser: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெளியான தக் லைஃப் டீசர்..!
கர்ப்பமாக ஆன போது, வா.. சொன்னபடியே இப்போது நாம ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் அவர் இப்போ வேண்டாம். கொஞ்ச நாள் கழித்து.. டைம் எடுத்துக்கொண்டு பண்ணிக்கொள்ளலாம் என்றார். ஏன் டைம் எடுக்க வேண்டும்?.. நானும் படித்து இருக்கிறேன்.. சம்பாதிக்கிறேன்.. லைஃபை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து என்னை அடித்தார். மேலும் கருவை கலைக்குமாறு கூறி அடிக்கடி, என்னை அடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து கருவை கலைத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என்று கூறினார். இதனால் நானும் சரி என்று கூறிவிட்டு.. கருவை கலைத்தேன்.
இதுக்கு அப்புறம் எங்க குடும்பத்தினரிடம் வந்து அவங்க குடும்பத்தினர் வந்து பேசினர். அப்போது சாதி தான் பிரச்சினை என்று சொன்னார்கள். மேரஜை பத்தியே பேசல. சாதியை பற்றி தான் பேசினாங்க. உங்க வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம் என்று சொன்னாங்க. ஆனால் குருகுகன் அவங்க அப்பா அம்மா முன்னாடியே என்னை தான் திருமணம் செய்வேன் என்று சொன்னார். ஆனால் அவங்க குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை. அவனை என்னை தொடர்புகொள்ள முடியாமல் செய்துவிட்டாங்க.. இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவங்க வீடு பூட்டியிருந்தது.
அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் போலீசிடம் வந்தேன். எங்க அப்பாக்கிட்ட கூட போன் செய்து ரெஜிஸ்டர் மேரேஜுக்கு சர்டிபிக்கேட் எல்லாம் கொண்டு வாரேன் என்று குருகுகன் சொன்னார். எனக்கு மேரேஜ் ஆக போகுது என்று அவங்க நண்பர்கள் குரூப்பில் கூட சொல்லியிருந்தார். ஆனால் அவங்க குடும்பத்தினர் தான் இப்போ என்னிடம் பேசவிடாமல் மலேசியாவுக்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள்" இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க கூறினார்.