Sivaji Ganesan: கலைக்கடல் அள்ளித்தந்த அற்புத முத்து.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்த தினம்..!
கலைக்கடல் அள்ளித்தந்த அற்புத முத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97வது பிறந்த தினம் இன்று.
அக்டோபர் 01, புதுடெல்லி (Special Day): நடிகர் திலகம், நடிப்பின் பல்கலைக்கழகம், செவாலியர், நடிப்பின் சிகரம் என்ற பல பட்டங்களைக் கொண்ட நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று (Sivaji Ganesan's 97 th birth anniversary). 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த சின்னையா மற்றும் ராஜா மணி தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது குழந்தைதான் சிவாஜி கணேசன். இவருக்கு பெற்றோர் கணேச மூர்த்தி என்ற பெயர் சூட்டினார்கள். சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய கணேசமூர்த்தி, எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை என்பவர் நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பாலகான சபாவில் சேர்ந்த நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நாடக வாழ்க்கை: பொதுவாக நாடகங்களில் நடிப்பவர்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வரும். அதே ஆசை தான் கணேச மூர்த்திக்கும் வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு பல நாடகங்களில் வெகு சிறப்பாக நடித்து வந்தார். எம் ஆர் ராதாவின் நாடகக் குழுவில் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகக்கத்தில் மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி ஆக நடித்தார். சுயமரியாதை இயக்க மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்தைப் பார்த்து பெரியார் சிவாஜியாக நடித்த கணேசனுக்கு சிவாஜி என்று பெயர் சூட்டினார். Vadakkan Wins Best Supernatural Thriller: சர்வதேச விருதினை வென்ற வடக்கன் படம்.. வரலாறு படைத்த மலையாள சினிமா..!
சினிமா வாழ்க்கை: 1950இல் நூர்ஜகான் நாடகத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து வியந்த டி ஏ பெருமாள் தனது பராசக்தி படத்தில் சிவாஜி நாயகனாக்கினார். தொடர்ந்து அவரின் பரிந்துரையில் சிவாஜிக்கு பல படங்கள் கை கொடுத்தது. அந்த காலம் தொடங்கி தனக்கு இளைய தலைமுறையினரான கமல், விஜய், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். 1953 ஆண்டுக்குள் ஏழு படங்களில் நடித்து முடித்த சிவாஜி 1957ஆம் ஆண்டுக்குள் 45 படங்களில் நடித்து முடித்தார்.
1979 ஆம் ஆண்டுக்குள் 200 படங்களில் நடித்து முடித்தார். இரண்டு ஹிந்தி படங்கள், ஒன்பது தெலுங்கு படங்கள், ஒரு மலையாள திரைப்படம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, நடிப்பு சுரங்கமாக, நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். அதுவும் பலே பாண்டியா படத்தில் மூன்று வெவ்வேறு வேடங்களில், சிவாஜி கணேசன், வெறும் பதினொரு நாட்களில், ஒட்டு மொத்த படத்தையும் நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்திய சினிமாவில் தனது அசாத்திய நடிப்பிற்கு பெயர் போனவரானார் சிவாஜி கணேசன்.
விருதுகள்: கடந்த 1963ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1966 ஆம் ஆண்டு,மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது ,பிறகு 1984 ஆம் ஆண்டு, மத்திய அரசின் பத்ம பூஷண் விருது, 1986 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம், 1995ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது, 1997 ஆம் ஆண்டு, இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது என பல விருதுகள் சிவாஜி கணேசனுக்கு வழங்கப் பட்டன. International Coffee Day 2024: சர்வதேச காபி தினம்.. காபியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
சிவாஜியை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று கர்ம வீரர் காமராஜர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சிவாஜி கணேசன் மறைந்தபோது “கட்டபொம்மனாக அவர் நடித்ததைப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கூர்மையான வசனம், கத்தியைவிட ஆழமாகப் பாயும் என்பதை உணர்த்திய அற்புதமான நடிகர் சிவாஜி, என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி இருக்கிறார். ‘நடிப்புக்கு சிறந்த உதாரணம் என்றால் அது சிவாஜி கணேசன் தான்’ என்று அறிஞர் அண்ணா பாராட்டி இருக்கிறார்.
இப்படி அனைவரும் வியந்து நடிப்பின் பல்கலைக்கழகம் என்று இன்றளவிலும் பாராட்டப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடல் நலக்குறைவால் 2001 ஆம் ஆண்டு காலமானார்.