அக்டோபர் 01, புதுடெல்லி (Special Day): உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், காபி கடை உரிமையாளர்கள் மற்றும் காபி செய்யும் மக்களை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினம் (International Coffee Day) ஆனது முதலில் 2015ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
வரலாறு: எத்தியோப்பியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவர், அன்றாடம் மேய்ச்சல் முடிந்ததும், மாலை மயங்கும் நேரத்தில் ஆடுகளை கொண்டு வந்து 'கிடை'யில் அடைத்துவிட்டு, இரவில் அருகில் உள்ள குடிசையில் தூங்கி விடுவார். ஆனால் ஒருநாள் ஆடுகள் தூங்காமல் விளையாடியுள்ளனர். காரணம், அவை ஏதோ ஒரு செடியை சாப்பிட்டுள்ளனர். மறுநாள் ஆடுகளோடு சென்று அவரும் அந்த செடியின் இலைகளையும், பூவையும் சுவைத்தார். Jelly Fruit Cake Recipe: பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. தயிர் ஜெல்லி ஃப்ரூட் கேக் செய்வது எப்படி? விபரம் உள்ளே.!
அதன் மணமும், சுவையும் அவருக்கும் உற்சாகத்தை தந்தது. அந்த விஷயம் பரவியது. காபி பழம், கொட்டை போன்றவைகளை சுவைத்து மகிழ்ந்த மக்கள் பின்பு கொட்டையில் இருந்து காபி தயாரித்தும் பருகியிருக்கிறார்கள். எத்தியோப்பியாவில் தோன்றிய காபியை உலகின் பல பகுதிகளுக்கும் பரப்பினார்கள். அப்படியாக, கி.பி.1554-ல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அரேபிய வியாபாரிகள் முதன்முதலில் காபி கடைகளை திறந்ததாக சரித்திர சான்றுகள் சொல்கின்றன.
காபி நன்மைகள்:
- காலையில் காபி குடிப்பது நமது மூளை மற்றும் உடலை எழுப்புகிறது. இது நமக்கு தூக்கம் வராமல் தடுக்கும்.
- காபியைப் பருகிய 5 -10 நிமிடங்களுக்குள், அதில் உள்ள கேஃபீன் மூளை நரம்புகளின் அடினோசின் (Adenosine) என்ற தாதுப்பொருளின் அளவைக் குறைப்பதுடன், டோப்பமைன் அளவைக் கூட்டுவதால், அது நம்மை உற்சாகப்படுத்தும்.
- அட்ரீனல் சுரப்பியைத் தூண்டுவதன் மூலமாக மூளைக்கு மட்டுமல்ல, நமது தசைகளுக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.
- மன அழுத்தத்தைக் குறைத்து, விழிப்புத் திறனையும் கூட்டும்.
- ஒற்றைத் தலைவலிக்கு மருந்தாகத் திகழும் காபி, அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவற்றிற்கும் பயனளிக்கும்.