YouTuber Irfan: குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ; அடுத்த சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்.!

தனது குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ,அறுவை சிகிச்சை அரங்கில் தனியாக வீடியோ என புதிய சர்ச்சையில் இர்பான் சிக்கி இருக்கிறார்.

YouTuber Irfan with New Born Baby & Wife (Photo Credit: YouTube)

அக்டோபர் 21, சென்னை (Chennai News): சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் இர்பான் (Youtuber Irfan), உணவு சாப்பிடுவது தொடர்பான வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கும் நிலையில், அவரின் வயிற்றல் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதனிடையே, இர்பானின் மனைவி பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. இதனையும் வீடியோ எடுத்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. Arnav Evicted: 'டேய் ஜால்ராஸ்' வாய்ப்பை தவறவிட்ட கடுப்பில் ஆண்கள் அணி மீது பாய்ந்த அர்னவ்; கண்டித்து அனுப்பிய விஜய் சேதுபதி.. விபரம் உள்ளே.! 

மருத்துவத்துறை சங்கம் முடிவு:

இந்நிலையில், யூடியூபர் இர்பானிடம் அறுவை சிகிச்சை அரங்கில் வீடியோ எடுத்து, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதாக விளக்கம் கேட்டு சம்மன் வழங்க மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு சம்மன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இர்பான் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவரின் கார் விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்து இருந்தது.

இர்பானின் யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif