IIT Student Dies By Suicide: ஐஐடி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?

டெல்லி ஐஐடியில் 21 வயதான மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hanging Suicide (Photo Credit: Pixabay)

அக்டோபர் 23, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில், ஐஐடியில் (IIT) எம்எஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலம், தியோகரைச் சேர்ந்த குமார் யாஷ் (வயது 21) என்ற மாணவர், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே, நேற்று (அக்டோபர் 22) ஐஐடி மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் குமார் அறை எண் டி57-ல் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துக் கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Fake Court: "யாரு சாமி நீங்க".. 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்தவர் கைது..!

தகவலின்பேரில், காவல்துறையினர் ஒருவர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது, அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஐஐடி ஊழியர்களும், அவரது நண்பர்களுடன் அறையின் உள்ளே செல்ல, ஜன்னலை உடைத்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு துண்டுகளை பயன்படுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர், அவரது உடலை மீட்டு ஐஐடி ஆம்புலன்ஸில் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது அறையில் சோதனை நடத்தியதில் தற்கொலை கடிதங்கள் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.