IND Vs CHN Hockey Final (Photo Credit: @IExpressSports X)

நவம்பர் 21, ராஜ்கிர் (Sports News): மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் (Women's Asian Hockey Champions Trophy) 8வது தொடர், பீகாரில் உள்ள ராஜ்கிர் (Rajgir) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றன. Dy CM Udhayanidhi Stalin: அயலக மண்ணில் வென்று வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வீரர்., துணை முதல்வர் பாராட்டு.!

தொடரின் அரையிறுதி சுற்றில், சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து, நேற்று (நவம்பர் 20) நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிர் (India Vs China Hockey Final) அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. மேலும், அதிக முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய (3 முறை) அணியின் சாதனையையும் இந்திய மகளிர் அணி சமன் செய்துள்ளது. இந்திய மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில், சீன மகளிருக்கு வெள்ளிப் பதக்கமும், ஜப்பான் மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.