நவம்பர் 21, அலிகார் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அலிகார் (Aligarh) அருகே உள்ள யமுனா நெடுஞ்சாலையில் டில்லியில் இருந்து அஸாம்கரை (Delhi to Azamgarh) நோக்கி, பயணிகளை ஏற்றிக் கொண்டு டபுள் டெக்கர் பேருந்து (Double Decker Bus) சென்றுக் கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் அதிபயங்கரமாக மோதியது. Hair Dryer Explosion: வெடித்து சிதறிய ஹேர் டிரையர்.. கையை இழந்த பெண்.., மக்களே உஷார்..!
இதில், பேருந்தில் பயணித்த 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கினர். இதனையறிந்த உள்ளூர்வாசிகள் பேருந்தின், கண்ணாடிகளை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச கோர விபத்து காட்சி:
#WATCH | Uttar Pradesh: Five people died, 15 injured in a collision between a truck and a double-decker bus in Tappal PS area of Aligarh late last night. The bus was heading from Delhi towards Azamgarh.
Visuals from the spot. https://t.co/I2kh7tCNr0 pic.twitter.com/jV0QCHPjzi
— ANI (@ANI) November 21, 2024