Fake Judge Arrested (Photo Credit: @IndianTechGuide X)

அக்டோபர் 23, அமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலம், காந்திநகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன். இவர், தன்னை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நீதிபதி எனக் கூறிக்கொண்டு, போலியான நீதிமன்றம் (Fake Court in Gujarat) ஒன்றை காந்திநகரில் அமைத்துள்ளார். மேலும், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில தகராறு வழக்குகளை கண்டறிந்து, அதில், சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேசியுள்ளார். அவர்களுடைய வழக்கை தீர்த்து வைப்பதாக கூறி, லஞ்சமாக பெரும் தொகை பெற்றுக் கொண்டு, அவரது போலி (Fake Judge) நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வந்துள்ளார். Flesh Trade: 14 வயது சிறுமிகள்.. சொந்த குடும்பத்தால் சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.. பத்திரமாக மீட்பு..!

அங்கு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களை போல ஆட்களை வாடகைக்கு வரவழைத்து, மனுதாரர்களை நம்ப வைத்துள்ளார். மேலும், விசாரணையின் இறுதியில் பணம் கொடுத்தவருக்கு சாதகமான தீர்ப்பையும் அளித்து வந்துள்ளார். இந்த போலி நீதிமன்றம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு, அரசு நிலத்தின் மீது உரிமை கோரிய நபருக்கு சாதகமான தீர்ப்பை அளித்தார்.

பின், அரசு வருவாய் ஆவணங்களில் மனுதாரரின் பெயரை சேர்க்ககோரி, அந்த போலி உத்தரவு நகலை இணைத்து, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கறிஞர் வாயிலாக மேல்முறையீடு செய்துள்ளார். இந்த உத்தரவு நகல் போலி என்பதை அறிந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய் கரன்ஜ் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேலை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.