Karnataka Bandh: கர்நாடகாவில் பந்த்: 44 விமானங்கள் ரத்து: ஐந்து போராட்டக்காரர்கள் கைது.!
அதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் பெங்களூர் விமான நிலையத்தில், கர்நாடகா மாநிலத்தின் கொடிபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செப்டம்பர் 29, பெங்களூர் (Karnataka News): கர்நாடகாவில் இன்று காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வலியுறுத்திய, உச்ச நீதிமன்றத்தின் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாநில அளவிலான ‘பந்த்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் விவசாயிகள் அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
விமான நிலையத்தின் அதிகாரிகள், விமானங்களின் செயல்பாட்டு கோளாறு காரணமாக பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும் பயணிகளுக்கு தக்க சமயத்தில் இது தொடர்பான தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். Minor Died Lightning Attack: மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் பரிதாப பலி: கடற்கரைக்கு ஆசையாக சென்ற சிறுவன் பிணமாக வீடுவந்த சோகம்.!
ஆனால் மற்றொரு தரப்பில் பந்த் காரணமாக பயணிகள், தங்களின் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் கொடியை ஏந்தி விமான நிலையத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 5 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்காக முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
பந்த் காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக மற்றும் ஜிடிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.