Mexico Gen Z Protest (Photo Credit : @JimFergusonUK X)

நவம்பர் 16, மெக்சிகோ (World News): நாடுகள் அளவில் அதிகரித்து வரும் ஊழல், குற்றம் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையிலிருந்து விலக்கு தொடர்பான விஷயங்களால் இளைஞர்களின் போராட்டம் உலகளவில் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதனை ஜென் ஸீ போராட்டம் என்று அரசியல் நிபுணர்கள் வருணித்து வருகின்றனர். இளம் தலைமுறை தான் காணும் நிகழ்காலத்தில் வாழும் செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் மித மிஞ்சிய ஆடம்பரத்துடன் இருப்பதால் அதனை எதிர்த்து தங்களுக்கான வாழ்வாதாரம் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பல நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Bus Truck Accident: 200 மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 37 பேர் பலியான சோகம்.!

வன்முறையாக வெடித்த ஜென் ஸீ போராட்டம்:

சமீபத்தில் நேபாளத்தில் நடந்த இந்தப் போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. இந்நிலையில் மெக்சிகோவின் (Mexico) நகர வீதிகளில் ஜென் ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டம் மெக்சிகோவை அதிர வைத்து இருக்கிறது. இந்த போராட்டம் ஆளுங்கட்சிக்கு எதிராக நடைபெறுவதால் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஒரு சில இடங்களில் போராட்டம் வன்முறையிலும் முடிந்து வருகிறது. மெக்சிகோவிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் காயம் அடைந்திருக்கின்றனர். மெக்சிகோவில் நேற்று நடைபெற்ற ஜென் ஸீ போராட்டம் காரணமாக 100 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 40 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவில் பரபரப்பு:

அதேபோல பதில் தாக்குதலில் 20 பொதுமக்களும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தின் போது நடந்த வன்முறை மிகப்பெரிய அளவில் அங்கு உருவாகியுள்ளதால் கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 1990 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் சமத்துவமின்மை, ஊழல் மற்றும் ஜனநாயகம் தொடர்பான விஷயங்களில் மெக்சிகோவில் இளைஞர்களின் போராட்டம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

மெக்சிகோவில் ஜென் ஸீ போராட்டம் (Gen Z Protest In Mexico):