Kerala Landslide: வயநாட்டில் கடும் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு.. 120 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!
கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 30, வயநாடு (Kerala News): கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை (Heavy Rains In Kerala) பெய்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் (Landslide In Wayanad) சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் கேரள மாநிலம் வயநாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மாலா என்ற பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் மலைப்பகுதிக்கு அருகே உள்ள வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில், இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 120 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Landslide In Kerala: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; இதுவரை 43 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..!
இதனைத்தொடர்ந்து, மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் உயிரிழந்த சடலங்களை மீட்க முடியாத நிலை தொடர்கிறது. ஹெலிகாப்டர் மூலமாகவும், ட்ரோன்கள் உதவியுடனும் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.