Pregnant Woman Case: வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி.. விடுமுறை அளிக்காத உயர் அதிகாரி.., நடந்தது என்ன..?
ஒடிசாவில் அரசு ஊழியர் ஒருவருக்கு பிரசவ வலியின்போது, விடுமுறை அளிக்கப்படாததால் அவருடைய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 30, கேந்திரபாரா (Odisha News): ஒடிசா மாநிலம், கேந்திரபாரா (Kendrapara) மாவட்டத்தில் டெராபிஷ் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஊழியராக பர்ஷா பிரியதர்ஷினி (வயது 26) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 7 மாத கர்ப்பிணியாக (Pregnant) இருந்த நிலையில், தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பணிக்கு சென்று வந்துள்ளார். கடந்த அக்டோபர் 25-ஆம் தேதியும் அவர் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது. College Girl Rescued: செல்பி எடுத்தபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி.. 20 மணிநேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்பு..!
இந்நிலையில், குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரியான (CDPO) சிநேகலதா சாஹூவிடம், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால், அவருடைய வேண்டுகோளை சிநேகலதா புறக்கணித்து, தொடர்ந்து பணியாற்றும் படி தெரிவித்துள்ளார். இதனால் பர்ஷா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அவர்கள் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது குழந்தை வயிற்றிலேயே இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் மனவேதனை அடைந்த பர்ஷா, இதற்கு காரணமான உயரதிகாரியின் துன்புறுத்தலும், அவருடைய அலட்சியமுமே காரணம் எனக்கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேந்திரபாரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, கேந்திரபாரா கூடுதல் மாவட்ட ஆட்சியர் நிலு மஹாபத்ரா, மாவட்ட சமூக நல அதிகாரி (DSWO) தலைமையில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.