College Girl Rescued In Karnataka (Photo Credit: @HateDetectors X)

அக்டோபர் 30, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், துமகூரு (Tumakuru) மாவட்டத்தில் குப்பி அருகிலுள்ள ஸ்ரவர்ணபுராவை சேர்ந்தவர் சோமநாத் கவுடா (வயது 48). இவரது மகள் அம்சா எஸ் கவுடா (வயது 20). இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று மாலை தும்கூருவை அடுத்துள்ள மைடாலா ஏரிக்கு நண்பர்களுடன் அவர் சுற்றுலா சென்றார். அங்கு பாறை மீது ஏறி செல்பி (Selfie) எடுத்தபோது, கால் தவறி பாறையின் (Rock) இடுக்கில் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். Son Kills Father: 30 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தி.. தந்தை கொடூர கொலை..!

இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கீழே விழுந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். பாறைகளை உடைத்து, கயிறு மற்றும் சங்கிலி மூலமாக மீட்க முயன்றனர். ஆனால், அவர் பாறைகளுக்கு இடையில் சுமார் 30 அடிக்கும் கீழே சிக்கிக் கொண்டதால் உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் குறைந்த ஒளியில், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், உடனடியாக அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவரது நண்பர்களும் உறவினர்களும் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி கதறி அழுதனர்.

இந்நிலையில், மீட்பு குழுவினர் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக‌ போராடி, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனால் அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் மரண பயத்தில் இருந்த மாணவி அம்சா கூறுகையில், செல்பி எடுத்தபோது கால் தவறி பாறை இடுக்கில் விழுந்தேன். இருள் சூழ்ந்த அதனுள் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. கீழே அமர முடியவில்லை. பாறை இடுக்கில் நின்று கொண்டே இருந்தேன். கண்களைக்கூட இமைக்க முடியவில்லை. அன்றிரவு முழுவதும் மரண பயத்தில் இருந்தேன். அடுத்த நாள் விடிந்தபோது மனித குரல்கள் கேட்டன. அப்போதுதான், எனக்கு நம்பிக்கை பிறந்தது என அவர் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாறை இடுக்கில் தவறி விழுந்த மாணவி பத்திரமாக மீட்பு: