Young Man Suicide By Shooting: காதலித்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு, வாலிபர் தற்கொலை..!

உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gun File pic (Photo Credit: Pixabay)

ஜூன் 11, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தியோபந்த் பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 26) என்பவர், தனது பக்கத்து ஊரை சேர்ந்த 24 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், அந்த இளம்பெண் ராஜனை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். Minor Girl Marriage: திருமணமான 16 வயது சிறுமி காதலனுடன் தப்பி ஓட்டம்..! இருவர் கைது..!

இதனால், ஆத்திரமடைந்த அவர், இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த அவரை துப்பாக்கியால் (Gun Shoot) சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில், படுகாயமடைந்த இளம்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்நிலையில், அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, ராஜன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.