இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்..!

உத்தர பிரதேசத்தில் வாலிபர் தனது காதலியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girlfriend Murder Case in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 07, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், எட்டாவைச் சேர்ந்தவர் ரோஹித் குமார் (வயது 23). இவரும், காஜல் (வயது 20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு காஜலுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து, காதலன் ரோஹித் குமார், தனது காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால், காஜல் நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். ஆபத்தான சிகிசை முறை.. 700 பேரின் உயிரை காவு வாங்கிய பகீர் சம்பவம்.!

காதலி கொலை:

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது காதலி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆத்திரத்தில் அங்கிருந்த கத்திரிக்கோலால் தனது காதலியை குத்திக் கொடூரமாக கொலை (Murder) செய்தார். இதன்பிறகு, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலன் ரோஹித் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement