Aadhar Card Update: ஆதார் கார்டு இலவச புதுப்பிப்பு காலக்கெடு டிசம்பர் 14, 2024 வரை நீட்டிப்பு; ஆதார் ஆணையம் அறிவிப்பு.!

இலவசமாக ஆதார் கார்டுகளை புதுப்பித்துக்கொள்வதற்கான காலக்கெடு, டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Aadhar Card | File Pic (Photo Credit: Wikipedia Commons)

செப்டம்பர் 12, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தனிநபர் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் (Aadhar Card) அட்டையை, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பெயர், புகைப்படம், முகவரி, மின்னஞ்சல் உட்பட விபரங்களை பதிவேற்றம் செய்து புதுப்பித்துக்கொள்ள ஆதார் ஆணையம் அறிவித்து இருந்தது. வீட்டில் இருந்தபடி மொபைல் எண் உட்பட பல்வேறு விபரங்களை மாற்ற இயலும் எனினும், கைரேகை, முக அடையாளம், கண்விழி பதிவு போன்றவற்றை ஆதார் மையங்களுக்கு சென்று மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. Cuddalore: "எப்ப பார்த்தாலும் படி-படி".. பெற்றோரின் கண்டிப்பால், பள்ளி மாணவிகள் திடீர் மாயம்.. பதறிய பெற்றோர்.! 

குவியும் கூட்டம்:

ஆதார் கார்டு பெற்றவர்கள் பலரும், அதனை பெற்றதில் இருந்து தற்போது வரை எந்த விதமான புதுப்பிப்பு இன்றி இருந்தனர். இதனால் இலவசமாக ஆதாரை புதுப்பிக்க அரசு காலக்கெடு நிர்ணயித்த நிலையில், செப்டம்பர் 14ம் தேதி காலக்கெடு நிறைவு பெறுவதாக இருந்தது. இதனால் இறுதிக்கட்டத்தில் பலரும் ஆதார் புதுப்பிப்பு மையங்களில் குவிந்தனர்.

காலக்கெடு நீட்டிப்பு:

இந்நிலையில், ஆதாரை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் என்பது செப்டம்பர் மாதம் 14 ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவித்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் 14 ம் தேதி வரை ஆதார் புதுப்பிப்பு செய்ய கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்ததால், பல்வேறு ஆதார் புதுப்பிப்பு மையங்களில் கூட்டங்கள் அலைமோதி வரும் நிலையில், ஆதார் ஆணையம் காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டு இருக்கிறது.