Cuddalore Girl Student Missing Case on 11-Sep-2024 (Photo Credit: Facebook)

செப்டம்பர் 12, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பாரதி சாலையில், அரசு உதவிபெறும் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 09ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளில் 4 பேர், சம்பவத்தன்று பள்ளி முடிவடைந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

காவல்துறையினர் விசாரணை:

இதனால் பதறிப்போன சிறுமிகளின் பெற்றோர், அடுத்தடுத்து பள்ளிகளுக்கு சென்று முறையிடவே, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர், துரிதமாக விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், மாணவிகள் பள்ளியில் இருந்து எங்கே சென்றார்கள் என்பதை கவனிக்க சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2 Youth's Escape from Death: நூலிழையில் உயிரை கையில் பிடித்து, நீந்தி உயிர்தப்பிய இளைஞர்கள்; அலட்சியத்தால் நட்டாற்றில் கதறிய சோகம்.! 

தீவிர தேடலில் இறங்கிய அதிகாரிகள்:

அதில், மாயமானதாக கூறப்பட்ட நான்கு மாணவிகளும் ஒன்றாக வழியே சென்றது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மாலை 05:00 மணிக்கு பள்ளியில் இருந்து வெளியே சென்றுள்ளனர். இதனால் மாணவிகளின் புகைப்படங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி மாநில காவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.

அதிர்ச்சி திருப்பம்:

இதனிடையே, மாணவிகள் அனைவரும் சிதம்பரத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பின் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, வீட்டில் பெற்றோர் எப்போதும் சம்பந்தப்பட்ட மாணவிகளை படி-படி என கூறி இருக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த மாணவிகள், சம்பவத்தன்று தங்களுடன் பயின்று வரும் மற்றொரு மாணவியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவிகளுக்கு அறிவுரை கூறிய காவல் துறையினர், பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று கடலூர் மாவட்டமே பரபரப்பில் ஆழ்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.